search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண பொருட்கள்"

    கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:
     
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல்& கலைச்செல்வி தம்பதியரின் மகன் நீலகண்டன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கஜா புயலால் இவர் வசிக்கும் குடிசை வீடு மிகுந்த சேதத்துக்குள்ளானது.

    இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர். தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய் துறையினர் வழங்கியுள்ளனர். ஆனால் மிகுந்த சேதத்துக்குள்ளான நீலகண்டன் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நீலகண்டன் தனது வீட்டு ரேசன்கடை அருகே இருந்த டிரான்ஸ்பாரத்தில் ஏறி தனக்கு நிவாரணப் பொருட்கள் வழங்ககோரி கோஷமிட்டவாரே மின்சாரம் பாயும் மின்கம்பியை பிடித்து விட்டார். இதில் நீலகண்டன் உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நீலகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    கஜா புயலால் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. #GajaCyclone #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பானுமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து துணிமணிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேர்ந்தன. இந்த பொருட்கள் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டு நேற்று மாலை டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் அந்த பொருட்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. சென்னையில் ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகிகள் அவற்றை பெற்று, புயல் பாதித்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 
    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அனுப்பி வைத்தார். #ADMK #kadamburRaju
    மதுரை:

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. #GajaCyclone
    சேலம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, வாட்டர் பாட்டில், பால் பவுடர், கொசுவர்த்தி போன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்களை மாநில கொள்கை பரப்பு செயலாளர் உலகநம்பி தலைமையில் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரிய லூரில் நடைபெறும் த.மா.கா 5-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு 5 தீபஜோதியுடன் நிர்வாகிகள் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் சின்னத்துரை, மகளிரணி மாநில பொது செயலாளர் சங்கீதா, மாநகர பொது செயலாளர் ஆட்டோ தயாளன், சக்தி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    கடவூர் ஒன்றியத்தில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.
    தரகம்பட்டி:

    கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, கடவூர், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.

    கடவூர் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, குடம் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் வெங்கட் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கஜா புயல் பாதித்த இடங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. #GajaCyclone
    காஞ்சீபுரம்:

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேற்று காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 25 வகையான பொருட்களை ரூ.2.26 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதே போல் மாவட்ட கருங்கல் குவாரி ஒப்பந்ததாரர்கள் சார்பில், 1008 குடும்பங்களுக்கு தேவையான 7 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து கலெக்டர் பொன்னையா கூறும்போது, “காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துதுறைகளின் சார்பில் இதுவரை கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1 கோடியே 26 லட்ச மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ரெயில்வே மந்திரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister
    சென்னை:

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  மூலம் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். சிலர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.



    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    கேரளாவில் மழை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருட்களுக்கான சரக்கு கட்டணத்திற்கு விலக்கு அளித்ததுபோல், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர்களுக்கு நன்கொடையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister
    திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் நிவாரணப் பொருட்கள் எடுத்து வந்த மினி வேனில் இளநீர் காய்களை ஏற்றி அப்பகுதி பொதுமக்கள் வழியனுப்பி வைத்தனர். #GajaCyclone
    திருச்சி:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு பலர் உதவி புரிந்து வருகின்றனர். பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மெழுகுவர்த்தி, பால் பவுடர், பிஸ்கட் பாக்கெட் டுகள், நூடுல்ஸ், தின்பண்டங்கள், ஆடைகள், செருப்புகள், கொசுவர்த்தி, நாப்கின்கள், சோப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் ஒரு மினி வேனில் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைப்பதற்காக சென்றனர். அவற்றை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் நேரடியாக சென்று வழங்கினர்.

    பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்திற்கு சென்று நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு வழங்கி விட்டு பின்னர் புறப்பட்டுள்ளனர். அப்போது பொதுமக்களுக்காக மாணவர்கள் நிவாரணப்பொருட்கள் எடுத்து வந்த மினிவேன் காலியாக புறப்பட்டது.



    இதனை பார்த்த போது மக்கள் ஏன் வெறும் வண்டியாக போகிறீர்கள் என கேட்டதோடு, மாணவர்கள் வந்த வண்டிகளில் புயலால் சாய்ந்து கிடந்த மரங்களில் இருந்த 200 இளநீர் காய்களை பறித்து ஏற்றி வைத்து வழியனுப்பி வைத்தனர். #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து 3 லாரிகளில் நிவாரண பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சேலம்:

    கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்  பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.



    இந்த நிலையில், கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள், சங்கங்கள் வழியே ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

    இவற்றில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் விரிப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை முதல் அமைச்சர் பழனிசாமி சேலத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார்.  இவை உடனடியாக கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மற்றும் தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்படும்.#GajaCyclone #EdappadiPalanisamy
    கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. #keralarain

    நாசரேத்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெரியார் தாலுகா செண்ட மங்கலம் கிராமத்தில் 700 குடும்பத்திலுள்ள 2 ஆயிரத்து 500 பேருக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 கிலோ அரிசி பைகள், மசாலாப் பொருள்கள், சீனி, பிஸ்கட், மாணவ -மாணவிகளுக்கான பேக்குகள், டிசர்ட், நைட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் அதன் ஊழியர்கள், அதனுடன் இணைந்து செயல்படும் புது வாழ்வுச் சங்க உறுப்பினர்கள் மூலமாக 3-ம் கட்டமாக வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வகுமார் தலைமையில் புது வாழ்வுசங்கத்தினர் செய்திருந்தனர். #keralarain

    நெல்லையில் இருந்து இன்று அதிகாலை ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களுடன் வைகோ கேரளா புறப்பட்டு சென்றார். #KeralaFloods #Vaiko
    நெல்லை:

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ ம.தி.மு.க. சார்பாக நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் நெல்லையில் இருந்து 4 லாரிகளில் ஏற்றப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கேரளா கொண்டு செல்ல புறப்பட்டு சென்றன.

    இதை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். நிவாரண பொருட்களுடன் வைகோவும் நெல்லையில் இருந்து காரில் கேரளா சென்றார்.

    அவருடன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், செல்வம், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் நிர்வாகி களும் வைகோவுடன் கேரளா சென்றனர்.

    100 ஆண்டு காலம் இல்லாத வகையில் கேரளாவில் பேய் மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. ம.தி.மு.க. சார்பாக சகோதரத்துவ மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவ ரூ.20 லட்சம் செலவில் அரிசி, மருந்து பொருட்கள், உடைகள் என நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் ம.தி.மு.க. சார்பாக ரூ.10 லட்சம் நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.

    கேரள முதல்வர் பினராய் விஜயன் அமெரிக்கா சென்றுள்ளதால், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவை சந்தித்து இந்த நிதி உதவியை நேரில் வழங்குகிறேன். ஆலப்புழா, வயநாடு பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் நிவாரண பொருட்களை நேரில் வழங்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து இன்று பகல் கேரளாவில் உள்ள வயநாடு, ஆலப்புழா பகுதிகளுக்கு சென்ற வைகோ, ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் கேரள மக்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு சென்று பொருட்களை வழங்கினார்.

    எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் அரசு அதிகாரிகளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வைகோ வழங்கினார்.  #KeralaFloods #Vaiko


    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கேரள மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவுரையின்படி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகர் தலைவர் கோபி முன்னிலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான அரிசி, மைதா, ரவை, கோதுமை போன்ற உணவு பொருட்களும், பல்வேறு வகையான மருத்துவ உபகரண பொருட்களையும் அனுப்பி வைத்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, பொருளாளர் அகமது கபீர், கிருஷ்ணராஜ், ஜோதி பாலன், பரமக்குடி நகர் காங்கிரஸ் கமிட்டி அப்துல் அஜீஸ், ஹாஜா நஜிமுதீன், அப்பாஸ் நிர்வாகிகள் சேதுபாண்டி, மணிகண்டன், கருணாகரன், மேகநாதன், ரவி, கார்த்திகைநாதன், கவுசி மகாலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயனிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.

    ×